பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா.!

Advertisements

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து, பா.ஜ.க-வின் ‘தாமரை’ சின்னத்திலேயே தமாகா 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமாகா தோல்வியைத் தழுவியது. கூட்டணியில் தொடர்ந்து இருந்தாலும் தங்களால் தேர்தல் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்ற யதார்த்தத்தை ஜி.கே.வாசன் செயற்குழுவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி தன் சொந்த பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும், “தனித்தன்மையோடு”  செயல்பட வேண்டும் என்றும் தமாகா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததே இந்த விலகலுக்கு முதன்மைக் காரணம்.

 பா.ஜ.க அல்லது அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் தங்களுக்கு எந்தவித தனிப்பட்ட மோதலோ, சண்டையோ இல்லை என்றும், ஒரு “நட்பு ரீதியான விலகலாகவே” இது இருக்கும் என்றும் வாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’  மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள சூழலில், உள்ளாட்சித் தேர்தலை நோக்கி தமாகா எடுத்துள்ள இந்தத் தனிப்பாதை முடிவு, சிறிய கட்சிகள் தங்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் ஒரு தற்காப்பு உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *