Accident: பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு!

Advertisements

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் பேருந்துபின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுநகர் காவல் துறையினர் விசாரணைநடத்திவருகின்றனர்.

கடலூர் குண்டு உப்பளவாடி பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் (65). இவர் அதே பகுதியில் மாவு அரவை மில் நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலைத் திருஞானம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை எதிரில் உள்ள மில்சென்டர் அருகே எதிர்பாராத விதமாக மோதித் திடீரென இடது புறம் விழுந்துள்ளார்.

அப்போது கடலூரிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்துபின் சக்கரத்தில் சிக்கி திருஞானம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தகாவல்துறையினர் போக்குவரத்து சரி செய்து உயிரிழந்த திருஞானம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்துபோலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *