Parliament Attack Security Breach: மக்களவையில் அதிர்ச்சி சம்பவம்!

நாடாளுமன்ற மக்களவையில் கண்ணீர்ப்புகை வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது டில்லியில் நடந்துள்ளது.

தற்போது டில்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு கருத்துகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென்று கண்ணீர்ப் புகை வீசப்பட்டதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பார்வையாளர்களாக வந்த ஆண், பெண் இருவர் கண்ணீர் புகை குண்டுகளை திடீரென்று யாரும் எதிர்பார்க்காத சூழலில் வீசியதால் மஞ்சள் புகை சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் அலறியடித்து ஓடினர்.

இதனால் எம்பிக்கள் பதறி அங்கும் ஓடினர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த கூட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கண்ணீர் புகை குண்டு வீசியவர்கள் தப்பியோடினர்.

மேலும் மக்களவை கட்டிடத்தில் குண்டு வீசிய நினைவு தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் பாராளுமன்ற கட்டிடம் தாக்கிய  நாள் டிசம்பர் 13-ஆம் தேதி அன்று குண்டு வீசி தாக்கப்பட்ட நாள்  ஆகும். சரியாக 22 வருடங்கள் கழித்து  இது போன்று ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பியின் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசிய பெண்  தாண்டிக் குதித்து ஓடும் போது உடனே பிடிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து  எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறுகையில் கண்ணீர் குப்பியானது சபாநாயகரை நோக்கி வீசியதாக தெரிவித்தார்.மேலும் இது விஷப் புகையாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார். இது மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *