தில்லியில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களைக் காவல்படையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
நீட் தேர்வு முறைகேடு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றைக் கண்டித்துத் தில்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல இளைஞர்கள் முயன்றனர். அவர்களுக்கு ஆதரவாகத் திரிணாமூல் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா, ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டோர் அங்குச் சென்றனர்.
பேரணியாகச் செல்ல முயன்ற இளைஞர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்ற இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால் நாடாளுமன்றத் தெரு போர்க்களம்போல் காட்சியளித்தது.

