பாஜகவில் ஓபிஎஸ் : தவெகவில் டாக்டர் கிருஷ்ணசாமி. பரபரப்பு பின்னணி.!

Advertisements
அரசியல் களத்தில் திக்கு முக்காடி போய் இருக்கும் மருத்துவர் ராமதாஸ் என்ன செய்யப் போகிறார்? ஓ பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார்? டாக்டர் கிருஷ்ணசாமி என்ன செய்யப் போகிறார்? என மூன்று முக்கியமான கேள்விகளுக்கு பரபரப்பான விடை கிடைத்திருக்கிறது.
தமிழக முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராகவும் , அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் கொடிகட்டி பறந்து வந்த ஓ பன்னீர்செல்வம் தற்பொழுது தன்னந்தனி ஆளாக தவிக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்.  எடப்பாடி பழனிச்சாமியையும் டிடிவி தினகரனையும் பார்த்து நான் . அதிமுகவில் இணைய சம்மதம் தெரிவிக்கிறேன் நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவீர்களா என்று கேள்வி கேட்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார் .
இதற்கு காரணம் அவருடன் போர் கொடி பிடித்து வந்த முக்கிய தலைமை நிர்வாகிகள் அனைவருமே திமுக பக்கம் தாவி விட்டார்கள். தற்பொழுது,  அவர் பக்கம் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் தனித்து இருக்கிறார் . .அவரும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என்ற நிலையில் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில்,  அவர் பலவிதமான வேண்டுகோள்கள் விடுத்தும் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைப்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் . இந்த நிலையில் . டிடிவி தினகரன் ஓ பன்னீர் செல்வத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி இடம் கைபேசியில் தொடர்பு கொண்டு சிபாரிசு செய்து வருகிறார் .
இதன் முக்கிய கட்டமாக ஓ பன்னீர்செல்வத்தை பாரதிய ஜனதா கட்சியில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் அவரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது என ஒரு பச்சைக் கொடி காட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் மூலம் ஓ பன்னீர்செல்வத்துக்கு ஒரு நல்ல கூட்டணி வாய்ப்பு தற்போது அமைந்திருக்கிறது.  அவர் அதிமுகவுடன் அல்லாமல் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேரப்போகும் தகவல் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது .
இதற்கிடையே , மருத்துவர் ராமதாசை பொருத்தவரையில் தொல் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்த வகையில் அவர் திமுகவுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.  திமுகவை பொருத்தவரையில் எந்த காரணம் கொண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இழக்க விரும்பவில்லை.  அந்த வகையில் மருத்துவர் ராமதாசுடன் திரைமறைவில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது .
மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி வட மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடலாம்.  தனியாக ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தேவையான நிதி உதவிகளை திமுக செய்வதாக பேசியிருக்கிறது . எனவே மருத்துவர் ராமதாசை பொருத்தவரையில் வட மாவட்டங்களில் தனித்து களம் காண இருக்கிறார் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணிக்கு தகுந்த வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகிறார் . தற்பொழுது அவருக்கும் ஒரு நல்ல விடை கிடைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகத்தில் அவர் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன .
டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த வாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து கூட்டணி பற்றி பேசியிருக்கிறார். அப்போது தமிழக வெற்றி கழகத்தில் தனக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கி தருமாறு கேட்டிருக்கிறார் . இது சம்பந்தமாக நடிகர் விஜய் இடம் இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது .
தலித் ஆதரவாளர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக வெற்றி கழக கூட்டணியில் சேரலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது . எனவே,  திக்கு தெரியாத காட்டில் சிக்கித் தவித்த மருத்துவர் ராமதாஸ் ஓ பன்னீர்செல்வம் டாக்டர். கிருஷ்ணசாமி ஆகியோருக்கு நல்ல விடை கிடைத்திருக்கிறது என்பதை முதல் தகவலாகவும் முக்கிய தகவலாகவும் பார்க்கப்படுகிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *