அரசியலில் “0” ஆன அண்ணாமலை, சரத்குமார், விஜயதாரணி.!

தமிழக அரசியலில் கொடி கட்டி பறந்து வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் , பாரதிய ஜனதா கட்சி முன்னால் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் விளவங்கோடு முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியம் பாரதிய ஜனதா கட்சியால் இந்த முறை ஓரங்கட்டி இருப்பது அதிர்ச்சி தகவலாக பார்க்கப்படுகிறது .
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரமாக மட்டுமல்லாது ,  சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும் கொடிகட்டி பறந்து வந்தவர் சரத்குமார். தென் மாவட்டங்களில் தனக்கென தனி செல்வாக்கு பெற்றவர் இவர்.  அதிமுக திமுக என கூட்டணிகள் வைத்து வெற்றிகளையும் கண்டவர் .
ஒரு காலகட்டத்தில் , நிதி நெருக்கடியால் பாரதிய ஜனதா கட்சியுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பதாக அறிவித்து அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
இதேபோல்,  விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் விஜயதாரணி. இவரும் அந்த தொகுதியில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர் . ஆனால் காங்கிரஸ் கட்சியில் தனக்கு மகளிர் அணி தலைவி பதவி தரவில்லை என குற்றம் சாட்டிய நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் .
இவர்கள் இருவருமே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிறகு  , அகில இந்திய அளவில் மிகப்பெரிய பொறுப்புகள் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது . தற்பொழுது தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் சரத்குமாரும் விஜய தாரணியும் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார்கள் என்ற பேசும் பொருள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது .
இதனிடையே வருகிற சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு சரத்குமார் விருப்பம் தெரிவித்திருந்தார் . இது தொடர்பாக பாஜக மேல் இடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோடு தொடர்பு கொண்டு பேசியபோது , தென்காசி தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு விட்டு தர முடியாது இந்த முறை அந்த தொகுதியில் அதிமுக போட்டியிடும் என தகவல் தெரிவித்து விட்டனர் .
பதிலுக்கு திருச்செந்தூர் தொகுதியில் வேண்டுமென்றால் சரத்குமார் போட்டியிடலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது . ஆனால் திருச்செந்தூர் தொகுதியை பொருத்தமட்டில் திமுகவைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு மிகப் பெரிய செல்வாக்குடன் திகழ்கிறார். தற்போது திமுக தரப்பில் அவருக்குதாதான் மீண்டும் தொகுதி ஒதுக்கி தரப்படும் என தெரிகிறது எனவே அனிதா ராதாகிருஷ்ணன் உடன் போட்டி போட சரத்குமார் விரும்பவில்லை .
அந்த வகையில்,  சரத்குமார் ஆகிய நானோ அல்லது எனது மனைவியாகிய ராதிகா சரத்குமாரோ இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என இறுதி முடிவை எடுத்து பாஜக மேல் இடத்திற்கு தகவல் தெரிவித்து விட்டார் சரத்குமார். இதனை தொடர்ந்து , தென் மாவட்டங்களில் சரத்குமாரும் ராதிகா சரத்குமாரும் தேர்தல் பிரச்சாரங்களை மட்டும் மேற்கொள்ளும்படியாகவும் அதற்கு தேவையான நிதி உதவிகளை செய்வதாகவும் பாரதிய ஜனதா கட்சி மேலிடம் உறுதி அளித்திருக்கிறது.
இதற்கு சரத்குமாரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது . இதனிடையே விஜயதாரணியை பொறுத்தவரையில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட  விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது .
ஆனால் விஜய தாரணியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது .
இதன் காரணமாக விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிட மாட்டார் என தகவல் வெளியே கசிந்து இருக்கிறது . அதேசமயம் விஜயதாரணியை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் வகையில் தென் மாவட்டங்களில் அவருக்கு தேவையான நிதி உதவிகளை செய்து பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளும்படி தகவல் சொன்னதாக தெரிகிறது.
இதனிடையே,  தமிழக அரசியல் வரலாற்றில் வெற்றிக்கொடி கட்டி பாரதிய ஜனதா கட்சியில் உச்ச நிலைமைக்கு சென்ற அண்ணாமலையும் தற்பொழுது ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார் என்பது அவரது தொண்டர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது ,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் ஆன அண்ணாமலை மீண்டும் கோவை தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் என்ற பணி மட்டும் தரப்பட்டு இருக்கிறது.
அவருக்கு கோவை தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தாலும் வெற்றி வாய்ப்பு குறைவு என்ற உளவுத்துறை தகவல் டெல்லி பாஜக மேல் இடத்திற்கு சென்று இருக்கிறது . கோவை மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற உளவுத்துறை தகவல் மூலம் அண்ணாமலையை தேர்தல் காலத்தில் நிறுத்தினால் மீண்டும் தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும் என பாரதிய ஜனதா கட்சி மேலிடம் கருதுகிறது .
இது தவிர , தேர்தலில் வெற்றி பெற்றால் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் தனக்கு பேரும் புகழும் தேடி கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.  இதன் காரணமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவதற்கு பாஜக தரப்பில் தொகுதி எதுவும் ஒதுக்கி தரப்படாது என்ற சூழ்நிலை நிலவுகிறது .
எனவே அண்ணாமலையையும்தேர்தல் பொறுப்பாளர் பணி கொடுத்து பிரச்சாரம் மட்டும் செய்வதற்கு பாஜக அனுமதி அளித்திருக்கிறது.
இது தொடர்பாக அண்ணாமலை இடம் டெல்லி பாஜக மேலிடம் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது . அண்ணாமலை அளவுக்கு மீறி சொத்துக்கள் சேர்த்த வகையில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் எனவே அதனை சுமூகமாக முடித்து தருவதாகவும் டெல்லி மேலிடம் அண்ணாமலையிடம் உறுதியளித்திருக்கிறது .
இதன் பேரில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரப்பீரங்கியாக மட்டும் இருப்பார்.  அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என்றஅதிர்ச்சி தகவலும் தெரியவந்திருக்கிறது . தமிழகத்தைப் பொறுத்த வரையில் அண்ணாமலைக்கு என தனிப்பட்ட கூட்டம் இருக்கிறது . தற்பொழுது இந்த தகவலால் அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பது முக்கியச் செய்தியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *