டிரோன் தாக்குதலில் இந்திய மாலுமி பலி!

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து குஜராத் நோக்கி 14 இந்திய மாலுமிகளுடன் கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது அடையாளம் தெரியாத டிரோன் மூலம் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. ஓமன் அருகே அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கந்தர் நஹீம் அஜிஜ் என்ற மாலுமி உயிரிழந்துள்ளார். மேலும் 13 மாலுமிகள் ஓமன் கடலோரக் காவல்படையினரால் காயங்களுடன் மீட்கப்பட்டுள்னர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், உயிரிழந்த மாலுமியின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், காயமடைந்த மாலுமிகளை இந்தியாவிற்கு அழைத்து வரவும் உயிரிழந்தவரின் உடலை விரைவாக தாயகம் கொண்டுவருவதற்கும் அரசுப் பணியாற்றி வருகிறதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *