தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மேலும் கடலோர கர்நாடக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *