இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில், 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில், ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான வீரர்களும், நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர். இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் ஒருநாள் போட்டிகளில் 123 முறை மோதியுள்ளன. அதில் இந்திய அணி 63 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 52 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எட்டு போட்டிகள் சமனில் முடிந்தது. எனவே இன்றைப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


