மாணவர்களுக்கு பரிசளிக்கும் CM விஜய்!

சென்னையில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பரிசுகள் வழங்கி கவுரவிக்கவுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குத் தவெக சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில், தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டி கவுரவிக்கவுள்ளார்.
இவ்விழா குறித்து அமைச்சர் ஆனந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதல் கட்டமாக இன்று சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி கவுரவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *