கோவையில் இன்று நடைபெறும் பாராட்டு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
கோவையில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட பிரமாண்ட நூலகத்துக்குப் பெரியார் பெயர் வைத்ததற்காகத் திராவிடர் கழகம் சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா இன்று மதியம் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு, கோவை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து நீலாம்பூர் செல்கிறார். அங்கு ஒருங்கிணைந்த மாவட்ட திமுக அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு அவர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு அவர் விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.


