
ஜெய்பீம் திரைப்படம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. விவசாயிகளை, ஏழை எளிய மக்களை பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய நேரம் இல்லையா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், ‘நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பாதுகாத்து இருக்கவேண்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.
திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை. ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா பார்வையாளராக விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது. ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிப் போனார், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித் குமார் போன்ற காவல் நிலையம் மற்றும் லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக எதிர் கட்சியாக இருந்தால் தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க சிபிஐ விசாரணை தேவை என்று கோரிக்கை வைப்பது, திமுக ஆளும் கட்சியாக இருந்தால் தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க சிபிஐ விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் வரையில் சென்று வாதாடுவது. தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு எதிர்கட்சியாக வேறு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடக் கூடிய கட்சியாக திமுக மாறிவிட்டது என்றும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. சமீபத்தில் சென்னை மாநகராட்சி ரிப்பன் வளாகத்தில் இரவு பகலாக துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூலாக கூலி படம் பார்த்தது போன்ற ஏழை எளிய மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடும் போது அவர்களின் உணர்வுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக ஆட்சியாளர்கள் குறிப்பாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஈடுபவது தமிழ் நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்? சரமாரியாக கேள்விகளை முதல்வரை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ளார். அதே போல் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய் வீணாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டு , தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா உங்களுக்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்? அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களை பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான். விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சி யாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2021ல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, வேளாண்மைத்துறையில் முற்றிலும் தோற்றுவிட்ட திமுக அரசு தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கப் போகிறது என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கின்ற கட்சியாக ஆட்சியாக திமுகவும் அதன் தலைவர் தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாறிவிட்டதாகவும் தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்குவருகிறதோ அப்போதெல்லாம் குற்றவாளிக்கு சுதந்திரத்தை கொடுப்பதும் நிரபாதிகளுக்கு தண்டணையை கொடுக்கும் ஆட்சியாக திமுக மாறிவிட்டதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.




