
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த மாதம் 22-ந்தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டியது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தங்கம் விலை, உயர்ந்து கொண்டே சென்று ரூ.61 ஆயிரத்தையும் கடந்தது. இந்தச் சூழலில், கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது.
பிப்ரவரி 1-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.85 குறைந்து, ரூ.7 ஆயிரத்து 705-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.680 குறைந்து ரூ.61 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,810-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.62,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
