
வந்தவாசி அருகே காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியவிபத்தில் வாலிபர்ஒருவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகன் விக்னேஷ் (வயது 25). இவருக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. அவரது மனைவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். விக்னேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இரவு வந்தவாசியிலிருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.அப்போது மேல்மருவத்தூரில் இருந்துவந்தவாசி நோக்கி எதிரே சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைப் பைசல் என்பவர் ஓட்டி வந்தார்.சாலவேடு கூட்டுச் சாலை அருகே வந்தபோது காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விக்னேஷ் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோட்டார் சைகிள் தீப்பிடித்து எரிந்தது.பைசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவ இடத்திற்கு சென்ற டி.எஸ்.பி ராஜீ தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


