Advertisements

மனித குலத்தை அழிக்கப் போகும் ஏ ஐ தொழில்நுட்பம்: அதிர்ச்சி தகவல்கள்
உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் வெகுவிரைவிலேயே மனித குலத்தை அழிக்கக் காத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது
செயற்கை நுண்ணறிவு என்பது மனிதன் செய்யும் வேலையை எந்திரங்கள் செய்யும் ஒரு வித மாயாஜாலம் ஆகும். அதாவது மனிதனின் நுண்ணறிவை பயன்படுத்தி இயந்திரங்கள் வேலைகள் செய்யும் ஒரு தொழில் நுட்பமாகும். சுருக்கமாகச் சொன்னால் மனிதர்களைப் போல இயந்திரங்கள் யோசித்து, முடிவெடுக்கக்கூடிய ஒரு கணினி அமைப்பு .
AI தொழில்நுட்பம் என்பது தரவுகளைப் பயன்படுத்தி தானாகவே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது. கற்றுக் கொண்டவற்றை பயன்படுத்தி காரண காரியங்களை ஆராய்ந்து முடிவெடுப்பது. கொடுக்கப்பட்ட சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிவது. மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வது. அதற்குப் பதில் சொல்வது. பார்வையை உணர்ந்து பொருட்களை அடையாளம் காண்பது என மனிதன் செய்யும் வேலைகள் அனைத்தையும் இந்தத் தொழில்நுட்பம் செய்து விடும்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மெக்காலே என்ற விஞ்ஞானிதான் இதனைக் கண்டுபிடித்தார் 1950 களில் அறிமுகமான .இந்தத் தொழில்நுட்பம் 1960 களுக்கு பிறகு வேகமாக வளரத் தொடங்கியது தற்பொழுது இந்தியாவிலும் இந்தத் தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது .இதன் மூலம் இயந்திரங்கள் பேசும்.. எழுதும்.. படிக்கும்.. சொல்வதை புரிந்து கொள்ளும் ..சிக்கலுக்குத் தீர்வு கண்டு பதில் சொல்லும் ..என்பது போன்ற எண்ணற்ற மனித வேலைகளை இது சாதாரணமாகச் செய்துவிடும்.
இப்பொழுதே இணையதள ஷார்ட்ஸ் பகுதிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம் .முருகன் மாரியம்மன் போன்ற தெய்வங்கள் நம்மிடம் நேரடியாகப் பேசுவது சின்னக் குழந்தைகள் ஹலோ வணக்கம் மாமா என்று பேசுவது எனப் பலதரப்பட்ட வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இன்னும் சில வீடியோக்களில் இறந்து போன அம்மா அப்பா தாத்தா பாட்டிகள் பேசுவதையும் பார்த்திருக்கலாம்இவை அனைத்தும் தொழில்நுட்பம்மூலம் உருவாக்கப்பட்டவை
கடந்த 2023 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 48 சதவீத வளர்ச்சி பெற்று இருக்கிறது ஏஐ தொழில்நுட்பம் .நவீன காலத்தில் தொழில் நுட்பம் என்பது அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது இதில் ஏஐ தொழில்நுட்பத்தைத் தவிர்க்க முடியாது இந்தத் தொழில்நுட்பம்மூலம் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் பல சூழல்களில் இது நமக்கு ஆபத்துக்களை உண்டு பண்ணுவதாகவும் இருக்கிறது. இன்னும் ஐந்தே ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களுக்கு இணையாக மாறும் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
இப்போது உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எஐ மீதான ஆய்வுகளைத் தீவிரப் படுத்தி வருகிறன்றன.. இந்தத் தொழில்நுட்பம் வளர வளர மனிதர்கள் செய்யும் வேலை குறையும். அதாவது மனிதர்கள் செய்யும் வேலையை இந்தத் தொழில்நுட்பம் செய்து விடும் எனவே உலகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது
ஒரு பக்கம் ஏற்கனவே இருக்கும் வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலையில் இன்னொரு பக்கம் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெருகும் சூழ்நிலையும் இருக்கிறது.எனவே வருங்கால இளைஞர்கள் என்ன படிப்பு படித்தாலும் ஏ ஐ தொழில்நுட்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் ஏ ஐ தொழில்நுட்பம் தெரியாதவர்கள் வேலைவாய்ப்பில் திண்டாடக்கூடிய சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
AI தொழில்நுட்பம் வருகிற 2030 ஆம் ஆண்டில் உச்சகட்டத்தை தொடும் சூழ்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வேலையாட்களைப் பணியிலிருந்து நீக்கம் செய்யும் என்ற சூழ்நிலை ஏற்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது மிகவும் ஆபத்தானது. மனித குலத்தை அழிக்கும் சக்தி இந்தத் தொழில்நுட்பத்துக்கு இருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள்.
ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியா தடுமாறும் நிலையில் ஏ ஐ தொழில் நுட்பம் கோடிக்கணக்கான பேரின் வேலை வாய்ப்பு பறித்து விடும் என்கிறார்கள்.அதே சமயம் AI தொழில்நுட்பத்தைப் புறந்தள்ளுவும் முடியாது என்பதுதான் மனித குலத்தின் இக்கட்டான சூழ்நிலையாகப் பார்க்கப்படுகிறது
இது நவீன யுகத்தின் மிகப்பெரிய வளர்ச்சியாகும் என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை
Advertisements


