Thiruvannamalai : உதயநிதிக்கு திமுக சார்பில்  சிறப்பான வரவேற்பு..!

Advertisements

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

கீழ்ப்பெண்ணாத்தூர் அடுத்த காட்டுக்குளத்தில் மாவட்ட எல்லையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் செண்டை மேளம், வாத்தியமேளம், தாரைதப்பட்டை மேளம் முழங்கச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  பூங்கொத்துக் கொடுத்து அவரை வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *