நான்காவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி – இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்.!

நான்காவது இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிகிறது.

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலாவது போட்டி மழையால் ரத்தானது.

இதையடுத்து, இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலியாவும், மூன்றாவது போட்டியில், இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இ இந்நிலையில், கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் மைதானத்தில் நான்காவது இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெறுகிறது.

இதனையொட்டி, இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கே தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *