Bigg Boss Tamil 7: போட்டியாளர்களைப் பொளந்துகட்டிய கமல்ஹாசன்!

Advertisements

பிக்பாஸ் நிகழ்ச்சியில்  சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் ஸ்டிரைக் பண்ணியதை கண்டித்து கமல்ஹாசன் பேசிய புரோமோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்தச் சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக் பாஸ், சுமால் பாஸ் என இரு வீடுகளில் நடத்தப்படும் இந்தச் சீசனில், கேப்டனை இம்பிரஸ் பண்ணாத போட்டியாளர்கள் சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் மாயா, விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விஜய் வர்மா, ஐஷூ, பிரதீப் ஆண்டனி ஆகியோர் சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். விதிப்படி அவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குத் தேவையான உணவுகளைச் சமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உணவு சமைத்துக் கொடுக்க முடியாது எனக் கூறி சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போராட்டத்தில் குதித்தனர்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்குத் தண்ணீர் கூடக் கொடுக்காமல் கறாராக நடந்து கொண்டனர். இதனால் கடுப்பான பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தாங்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு அவர்களுக்குப் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து வெகுநேர போராட்டத்துக்குப் பின்னர் இரவு தான் தங்கள் ஸ்டிரைக்கை சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் நடத்திய போராட்டத்தைக் கமல்ஹாசன் இன்று கண்டித்துள்ளார். இதுகுறித்து வெளியாகி உள்ள புரோமோவில் கமல் கூறியதாவது : “ஒரு புரட்சி போராட்டம் செஞ்சிங்க. தண்ணிய கூடக் கொடுக்காம இருந்ததை ஸ்டிரைக்னு சொல்ல முடியாது. ஸ்டிரைக் பண்ணியது நியாயமா, நியாயமில்லையாங்குறது கேள்வியல்ல. நியாயத்துக்காகத் தான் நீங்க ஸ்டிரைக் பண்றீங்க. அதுல ஒரு நியாயம் இருக்க வேண்டாமா எனக் கமல்ஹாசன் அவர்களை விளாசிய புரோமோ வைரலாகி வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *