Bigg Boss Tamil Season 7: நிக்சனை வச்சு செய்யக் காத்திருக்கும் வினுஷா!

Advertisements

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று எலிமினேட் ஆகி தற்போது விருந்தினராக மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ள வினுஷா, நிக்சனை வச்சு செய்ய உள்ளதாகக் கூறி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது பைனலை நெருங்கி வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராகப் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில் முதலில் இன்று காலை அனன்யா ராவ் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து வினுஷா மற்றும் அக்‌ஷயா ஆகியோர் ஜோடியாகப் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அவர்களைப் போட்டியாளர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பின்னர் விஷ்ணுவிடம் அவர் டிக்கெட் டூப்பினாலே டாஸ்க்கில் சூப்பராக விளையாடியதாகப் பாராட்டிய வினுஷாவிடம், தம்பிகிட்ட பேசுனியா எனத் தினேஷ் கேட்க. அவரும் போன்ல பேசுனான், ஷோல பேசிக்கலாம்னு சொல்லிட்டேன். 70 கேமரா முன்னாடி வச்சு பேசுனான்ல, அதே 70 கேமரா முன்னாடி வச்சு பேசிக்கலாம்னு சொல்லிட்டேன் எனத் தடாலடியாக வினுஷா கூறியுள்ளதால் நிக்சனை விரட்டியடிக்கும் முடிவோடு அவர் வந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

முன்னதாக வினுஷா வீட்டில் இருந்தபோது அவருடன் அக்கா எனப் பாசமாகப் பழகி வந்த நிக்சன், பின்னர் அவரைப் பற்றி ஐஷுவிடம் பேசும்போது, அவர் என்னுடைய டைப் இல்லையென வினுஷாவை உருவகேலி செய்து கொச்சையாகப் பேசி இருந்தார். அவர்பேசியது ஒருகட்டத்தில் பூதாகரம் ஆனதும், பிக்பாஸே நிக்சன் சொன்ன அந்தக் கமெண்ட்டை போட்டியாளர்கள் முன் போட்டுக்காட்டினார். இதைப்பார்த்து அனைவரும் முகம் சுளித்தனர்.

இதற்குத் தான் எந்தவித தவறான நோக்கத்திலும் சொல்லவில்லை என்று சப்பைக்கட்டு கட்டி தப்பினார் நிக்சன். கமலும் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில்,  கடந்த சில வாரங்களுக்கு முன் அர்ச்சனா இதை மீண்டும் கிளறினார். அப்போது கோபமடைந்த நிக்சன், மறுபடியும் வினுஷா பத்தி யாராவது பேசுனா சொருகீருவேன் எனக் கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள வினுஷா இந்த விஷயத்தை மீண்டும் கிளற உள்ளதாகக் கூறி உள்ளதால் பிக்பாஸ் வீடே மீண்டும் பரபரப்பாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *