Bhavani Sangameswarar Temple: 25 கிலோ ஐம்பொன் விளக்குகள் அனுப்பிவைப்பு!

Advertisements

புகழ்பெற்ற தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் பவானி சங்கமேஸ்வரர் கோவிலிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 25 கிலோ எடையுள்ள ஐம்பொன் கிளை விளக்கு எடுத்துச் செல்லும் யாத்திரை பயணம் தொடங்கியது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிறைவு பெற்று பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் ராமர் கோவிலுக்கு நன்கொடை மற்றும் பல்வேறு பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.,

இந்த நிலையில் புகழ்பெற்ற தென்னகத்தின் காசு என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் பவானி நகர பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த அயோத்தி சசிகுமார் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் நிதி திரட்டி 25 கிலோ எடையுள்ள மூன்று அடி உயரம் கொண்ட கிளை விளக்கினை கொண்டு செல்ல முடிவு செய்து இருந்த நிலையில் இதற்கான யாத்திரை பயணம் பவானியிலிருந்து தொடங்கியது.

இந்தப் பயணத்தில் பவானியிலிருந்து பத்து நாட்களுக்குப் பிறகு அயோத்தி ராமர் கோவிலை அடைந்து இந்தக் கிளை விளக்கினை அயோத்தி ராமர் ஆலயத்திற்கு அர்ப்பணிக்க உள்ளனர்., இந்த நிகழ்ச்சியில் பவானி நகரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *