விடுதலைப் வீரர் பிர்சா முண்டாவின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150ஆம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டிக் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் அவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150ஆம் ஆண்டு நிறைவுவிழாவை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே உள்ள அவர் உருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராம்வீர் சிங் பிதூரி, பன்சூரி சுவராஜ் ஆகியோரும் பிர்சா முண்டா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *