காஷ்மீரின் ஸ்ரீநகரில் நௌகாம் காவல்நிலையத்தின் அருகே நேற்றிரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். கொல்லப்பட்டோரின் உடல்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் நளின் பிரபாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
மத்திய ரிசர்வ் காவல்படையின் தலைவர் பவன்குமார் சர்மாவும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார். ஜம்மு காஷ்மீரின் மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவினரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காவல்நிலையத்தின் உட்பகுதியில் இடிபாடுகளை அகற்றினர். காவல்துறையின் தடய அறிவியல் பிரிவினர் இன்று ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனர்.

