
சுரைக்காயில் உள்ள பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குக் குளிர்காலத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. சுரைக்காய் குளிர்ச்சி தன்னை கொண்டது என்பதால் சுரைக்காய் ஜூஸ் தயாரிப்பதற்கு முன் சுரைக்காயை வேகவைக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
லக்னோவில் உள்ள ரீஜென்சி மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ரிது திரிவேதி கூறுகையில், சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள் சி, பி1, பி2, பி3 மற்றும் பி9 ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களாகச் செயல்பட்டு நம் உடலை ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிடமிருந்து பாதுகாக்கின்றன.
சுரைக்காயில் உள்ள பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குக் குளிர்காலத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
சுரைக்காய் குளிர்ச்சி தன்னை கொண்டது என்பதால் சுரைக்காய் ஜூஸ் தயாரிப்பதற்கு முன் சுரைக்காயை வேகவைக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
குளிர்காலத்தில் தொடர்ந்து சுரைக்காய் ஜூஸ் குடிப்பது சருமம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும். மேலும், இது சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது.
இதுதவிர சுரைக்காய் ஜூஸ் ஒரு இயற்கையான க்ளென்சராகச் செயல்படுகிறது. இது நம் உடலிலிருந்து நச்சுக்களை நீக்குகின்றன. சுரைக்காய் ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் வயது ஏறினாலும் கூட இளமையாகத் தெரிவீர்கள்.
இதய ஆரோக்கியம்:
இதய ஆரோக்கியத்திற்கு சுரைக்காய் ஜூஸ் நல்லது. வெறும் வயிற்றில் தொடர்ந்து இந்த ஜூஸ் குடித்து வந்தால், நாளடைவில் இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கும்.
மேலும் சுரைக்காயில் அதிக டயட்ரி ஃபைபர் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்:
சுரைக்காய் ஜூஸ் வயிற்றுக்கு மிக நல்லது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. எனவே, சுரைக்காய் ஜூஸ் குடிப்பது செரிமான அமைப்பு சரியாகச் செயல்பட உதவுகிறது.
மேலும் இந்த ஜூஸ் நமது செரிமானப் பாதையைச் சுத்தமாக்குவதோடு குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.
முடி உதிர்வை தடுக்கிறது:
ஒருவர் அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டால் சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாம். அத்துடன், இந்தச் சாற்றையும் தலைமுடியில் தடவலாம்.
சுரைக்காய் சாற்றை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து, பின்னர் அலசிக் கொள்ளலாம். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பெரும்பாலான முடி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:
சுரைக்காய் ஜூஸில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்தது. சுரைக்காய் இயற்கையில் குளிர்ச்சியானது என்பதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது அதிகமாகக் குடிக்க வேண்டாம்.
சிறுநீரக ஆரோக்கியம்:
சுரைக்காயில் உள்ள குறைந்த கொழுப்பு மற்றும் அதிக டயட்ரி ஃபைபர் சத்து சிறுநீரகங்களுக்குச் சிறந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது எளிதில் ஜீரணமாகும்.
எனவே சுரைக்காய் சாறு சிறுநீரகங்களுக்கு நல்லது. இது சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது சிறுநீரக கற்களை உண்டாக்கும் அதிக அமிலத்தன்மையை குறைக்கிறது.
