
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அ.ம.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு அளித்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக கூறினார்.
இந்நிலையில் அ.ம.மு.க. சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக கூறுவது மோசடி வேலை என்றும், இதுதான் தூய சக்தி செய்யும் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றஞ் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், அ.ம.மு.க. சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சுயநினைவுடன் ஆதரவு கடிதம் எழுதியதாக த.வெ.க. தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




