Ayodhya Ram Mandir Inauguration 2024: ரஜினிக்கு அழைப்பு!

Advertisements

சென்னை: அயோத்தியில் வரும் 22ல் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. மேலும் ஜன.22ல் நண்பகல் 12.45 மணியளவில் கோயில் கருவறையில் ராமர் சிலை வைக்கப்படுகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *