ஆளுநரின் அழைப்புக்காகக் காத்திருக்கும் விஜய்…… ஆதரவு கடிதம் கொடுத்தும் இழுபறி…..!

மூன்றாவது முறையாக தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்கக் கோரியும் ஆளுநர் அழைப்பு விடுக்காததால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. இதில், ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்த நிலையில்  திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, மூன்றாவது முறையாக ஆதரவு கடிதங்களுடன், விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிகழ்வில், ஜனநாயகன் தயாரிப்பு நிறுவன தலைவர் வேங்கட நாராயணா உடன் இருந்ததார். இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ஆளுநரின் அழைப்பு கடிதம் இன்னும் வராததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *