அறிவாலயத்தில் ஸ்டாலின் அவசர ஆலோசனை…! தவெக-வின் ஆதரவு கோரிக்கையால் பரபரப்பு…!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆதரவு கோரியது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வில், திமுக தலைவர்கள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் த.வெ.க.வுக்கு ஆதரவு கோரியது தி.மு.க.வில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *