உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசம்- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்களாதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி அசலங்காவின் சதத்தால் 279 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது. முதல் 2 விக்கெட்டுகளை 41 ரன்களில் இழந்தது. அதனையடுத்து சகீப் – ஷண்டோ ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். முதலில் நிதானமாக விளையாடி இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாடினர். சகீப் 82 ரன்களிலும் ஷண்டோ 90 ரன்களிலும் மேத்யூஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீம் 10 ரன்களிலும் மஹ்முதுல்லாஹ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வங்காளதேசம் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் இருந்து கிட்டத்தட்ட இலங்கை அணி வெளியேறியது.