
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான நான்காவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 669 ரன்களைக் குவித்தது.
ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களும். ஜடேஜா 107 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
எனினும் தொடரில் இரண்டுக்கு ஒன்று என்கிற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.


