Cricket World Cup: இங்கிலாந்து அணி அபாரவெற்றி!

இங்கிலாந்து அணி அபாரவெற்றி!

தர்மசாலா: 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்தத் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தர்மசாலாவில் காலை 10.30 மணிக்குத் தொடங்கிய 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதின.அதில் டாஸில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாகப் பேர்ஸ்டோ, டேவிட் மலான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர்.தொடர்ந்து பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் நிலைத்து ஆடினார்.

மலான், ரூட், இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடிய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார்.தொடர்ந்து அவர் 140 ரன்களில் வெளியேறினார், மறுபுறம் அரைசதம் அடித்த ஜோ ரூட் 82 ரன்களில் வெளியேறினார்.இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது.வங்காளதேச அணியில் மெஹ்தி ஹாசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து விளையாடியவங்காளதேச அணி வீரர்கள் இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 8 ஓவரில் 49 ரன்களை எடுத்துத் 4  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசியாக அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து வங்காளதேச 227  ரன் எடுத்து அணி தோல்வி அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *