
பும்ரா கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணிக்கு வழங்கிய பங்களிப்பை அனைவரும் கவனித்திருப்பார்கள். அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பெற்றிருப்பது முக்கியமானது.
இந்திய அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளரான பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாததால், வங்கதேசம் இதனை தனது நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ் கூறியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கடந்த மாதம் சிட்னியில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் பந்து வீசும் போது, பும்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார், இதனால் 2வது இன்னிங்சில் பந்து வீச முடியவில்லை.
அவருக்கு ஓய்வு தேவை.
இவ்வாறு இம்ருல் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
