Advertisements

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ துரோகி என குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றிய நிலையில் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்க இருக்கிறார் . வைகோ தலைமையிலான மதிமுகவில் அவருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் மல்லை சத்யா.
இந்த நிலையில் மல்லை சத்தியா கட்சிக்கு துரோகம் செய்கிறார் அவர் எனது பெயரைக் கூட இப்போது உச்சரிப்பது இல்லை விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த மாத்தையா போல் என் முதுகில் குத்துகிறார் என வைகோ அதிரடியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்
இதைத் தொடர்ந்து மல்லை சத்யா பேசும் போது அண்ணன் வைகோவுக்கு ஒருபோதும் நான் துரோகம் நினைத்தது கிடையாது கட்சியில் இப்பொழுது துரை வைகோ தவறான வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறார்.
இதைச் சுட்டிக் காட்டியதால் தான் என் மீது இப்படி குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் வைகோவின் உயிரை மூன்று முறை காப்பாற்றியவன் நான் என்னை துரோகி என்று சொல்வதா?என்று பதில் கூறியிருந்தார் . தற்பொழுது மல்லை சத்யா மீது வைகோ கூறிய குற்றச்சாட்டு அந்த கட்சியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் மல்லை சத்யாவுக்கு ஆதரவாக போர்க் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் .
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகர மதிமுக சார்பில் நகர செயலாளர் பாபு ஏற்பாட்டில் 100 பேர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களது வாகனங்களில் இருந்த மதிமுக கொடியை அகத்தியதோடு அந்த பகுதியில் உள்ள கொடிக்கம்பக்களையும் அகற்றி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது வைகோவுடன் மல்லை சத்யா 32 ஆண்டுகள் பயணித்துள்ளார் தற்பொழுது மதிமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது. மல்லை சத்யாவை துரோகி என்று சொன்னதற்கு வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் மல்லை சத்தியா புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளன்று மல்லை சத்தியா தனது புதிய கட்சி பற்றி அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக திராவிட இயக்க கொள்கைகளோடு அந்த கட்சி இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது . தற்பொழுது திரைமறைவில் மல்லை சத்யாவின் கட்சிக்கு ஆட்களை திரட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது தமிழகம் முழுவதும் சுமார் 1000 நிர்வாகிகள் மல்லை சத்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்
இதற்கிடையே மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அவை தலைவர் துரைசாமியும் போர்க்கொடி பிடித்துள்ளார் அவர் கூறும் போது வைகோவுக்கு மனநிலை சரியில்லை அதனால் தான் இப்படி சூழ்நிலை நிலவுகிறது என குறிப்பிட்டுள்ளார்
Advertisements


