சந்தேகப் பேய் பிடித்த கணவன்..!

Advertisements

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை அடித்துக் கொன்றுள்ளார்.

ஆரணி அருகே முள்ளிப்பட்டைச் சேர்ந்த கவிதா கணவரை இழந்து தனது ஒரு ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஆரணி அடுத்த பையூரில் ஏற்கெனவே திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள வினோத்குமார் என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. வினோத்குமார் கவிதாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் முதல் மனைவி குழந்தைகள் ஆகியோருடன் வினோத்குமார் இரண்டாவது மனைவி கவிதாவைக் குடி வைத்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கவிதாவுக்கு வேறொரு ஆணுடன் தொடர் இருப்பதாகச் சந்தேகப்பட்ட வினோத்குமார் மது அருந்திவிட்டுக் கவிதாவை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் குடிவெறியில் இருந்த வினோத்குமார் கவிதாவை அடித்துச் சுவரில் தள்ளியுள்ளார். இதனால் தலையில் படுகாயமடைந்த கவிதா மயங்கி விழுந்தார். கவிதாவை மீட்ட உறவினர்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைச் சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.இதையடுத்துக் கவிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வினோத்குமாரைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்திச் சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *