வாடிவாசலில் காளைகளின் ஆட்டம்..!

Advertisements

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் பெரிய கருப்பண்ணசாமி அழகியபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

காரியாபட்டி அருகே ஆவியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்ற முறையில் சுற்றுக்கு 25 வீரர்கள் களம் இறக்கப்பட்டுப் போட்டி நடைபெற்றது.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாகத் துள்ளிப் பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டிக்கொண்டு அடக்க முயன்றனர்.
வீரர்களுக்கு அடங்காமல் துள்ளிக் குதித்து ஓடிய காளைகளுக்கும், துள்ளி வரும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன.மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் போட்டியைக் கண்டுகளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *