கர்நாடகாவை கர்ஜிப்பாரா?” காவிரி வாங்கிட்டு வாங்க.!”CM விஜய்க்கு நேரடி சவால்..!

Advertisements

தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுமாறு தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன் இரு மாநில அரசுகளையும் கடுமையாக விமர்சித்தார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் ஒகேனக்கல்லில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி தலைவர் விஜய பிரபாகரன், எல் கே சுதீஷ், மற்றும் கூட்டணி கட்சியான திமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட திமுக நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் பிரபாகரன், “தமிழக முதல்வர் விஜய் , காவிரி தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். காவிரி தண்ணீர் கிடைக்க கர்நாடக மாநிலத்தை நோக்கி ஓட வேண்டும்.

ஓடு ஓடு ஓடு ஓடுனு ஓடணும்! நீங்கள்தான் வேட்டைக்காரனாச்சே ணே! “நான் அடிச்சா தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே”னு பாடினீங்களே அண்ணே, போங்க போய் காவிரியை கேளுங்க! உண்மையான வேட்டைக்காரன் வீரப்பன் மட்டுமே. அவர் குழுவுடன் இருக்கும் வரை தமிழகத்திற்கு யாரும் தண்ணீர் தர மறுக்கவில்லை. அவர் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அவர் இல்லாவிட்டாலும் நான் கடைசி வரை உங்களுடன் இருப்பேன். வீரப்பனை கேப்டன் பிரபாகரன் படத்தில் நல்லவராக காட்டியவர் விஜயகாந்த்.

அது வரை வீரப்பனை எல்லாரும் கெட்டவர்களாகவே கருதியிருந்தனர். ஆனால் அந்த பிம்பத்தை உடைத்தவர் விஜயகாந்த்! “ஈ சாலக்காவேரி உந்து காது, ஈ சாலக்காவேரி எந்து காது” என கர்நாடகா மொழியில் பேசிய விஜய பிரபாகரன் “ஈ சாலக்காவேரி நம்து”.
காவிரி தண்ணீர் பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கையை விடுத்தார். மேலும் அவர் பேசுகையில், “திமுக ஆட்சியை போட்டோஷூட் ஆட்சினு சொன்னார்கள். ஆனால் இன்று இருக்கும் முதல்வர் விஜய் என்ன செய்கிறார்?

ஓகேனக்கலுக்கு வந்து ஏன் உங்களால் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை. கடந்த ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்ற போது விராட் கோலியை கர்நாடகா வரும்படி அந்த மாநில முதல்வர் அழைத்திருந்தார். அன்றைய தினம் அங்கு பல உயிரிழப்புகள் நிகழ்ந்து நிலைமை மோசமானது.

ஆனால் முதல்வர் விஜய்யை தற்போது மட்டும் கர்நாடகாவிற்கு வர வேண்டாம், நிலைமை மோசமாக இருக்கிறது என டிகே சிவக்குமார் கூறுகிறார். தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவர் விஜயகாந்த் தான். இன்று நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால் நானும் அழகாகத்தான் இருப்பேன்.

முதல்வர் விஜய் முதலில் கர்நாடகாவுக்கு செல்ல வேண்டும். நீட் தேர்விற்கு எதற்காக பிரதமர் மோடியிடம் இப்போதே கேட்க வேண்டும். அதை பின்னால் கேட்கலாம். நீட் தேர்விற்கு எதிராக போராடிய கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் அபிஜித்தை நான் ஒன்று கேட்கிறேன். டெல்லி வரை போராடிய அவரால் தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை. தமிழக மக்கள் அறிவாளிகள், அவர்களை ஏமாற்ற முடியாது என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

ஏ அண்ணன் வந்தா
தமிழ்நாட்டுக்கே ஒரு தெம்புதாண்டா…
வழி விடுங்கடா
நம்ம ஆளுதாண்டா!

தளபதி தலையிடாலேமே தமிழகத்திற்கு இன்று தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எதிர்கட்சி கம்முனு போங்கடா என்று தளபதி பேச்சால் அல்லாமல் செயலால் தண்ணீர் வந்தது மட்டுமல்லாமல்  கர்நாடக அணை கட்டுவதற்கும் கட்அண்ட் ரைட்டால் கர்ஜிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதுபோன்று தமிழக முதல்வர் விஜய் கர்ஜிக்கும் செய்தி மட்டுமல்ல குரலற்றவர்களின் குரலாக நமது ஜெம் தொலைக்காட்சி கர்ப்பிக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எப்போதும் நம்முடன் இணைந்திருங்கள்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *