தமிழக காங்கிரஸில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசலால்தான் காங்கிரஸ் அழியப்போகிறயது என்று இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கும் கருத்தை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாற்றப்பட்டார். தேர்தல் சமயத்தில் இரு பிரிவாக கட்சி இருந்ததால்தான் தேர்தலுக்கு பிறகு தலைமை மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டது. இப்படி இருக்கையில், தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதற்கு காரணம் உட்கட்சி பூசல்தான் என்று ராகுல் காந்தி தற்போது கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த பயிற்சி முகாம் நிறைவடைந்தது. நிறைவு விழாவுக்கு வருகை தந்திருந்த ராகுல் காந்தி, மாவட்ட தலைவர்களிடம் பேசினார். அப்போதுதான் கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது உட்கட்சி பூசல் என்று விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “கட்சியை அடிமட்ட அளவில் விரிவாக வளர்த்தெடுக்க வேண்டும். கிராம, பூத் அளவில் கட்சியின் கிளைகள் வளர வேண்டும். மாவட்ட தலைவர்கள் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களின் அன்றாட பிரச்சனைக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும், வலுப்படுத்த வேண்டும் எனில் நிர்வாகிகள், தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அகற்ற வேண்டும். கோஷ்டிபூசல்களை நிறுத்திவிட்டு, ஒருமித்த கருத்துடன் கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செல்லாத மாவட்ட தலைவருக்கு இடமில்லை. மாநில அளவில் ஏற்படும் உட்கட்சி பூசல்கள்தான், அடிமட்ட அளவில் தொண்டர்கள் சென்றடைவதை தடுக்கிறது. இந்த பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட வேண்டி இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
ராகுல் காந்தி பேசியது 100 சதவிகிதம் உண்மைதான். தேர்தலுக்கு முன்பு செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு டீம் திமுகவுக்கு முழு ஆதரவாக இருந்தது. இந்த டீமில் எம்எல்ஏக்கள் பலர் இருந்தனர். அதனால், திமுகவுடன் இணைந்தே பயணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேசிய தலைமைக்கும் குறிப்பாக ராகுல் காந்திக்கும் நெருக்கமான டீம், திமுகவுடனான ரேப்போவை விரும்பவில்லை. கேட்ட தொகுதிகளை கொடுத்தால்.. குறிப்பாக அதிகாரத்தில் பங்கு கொடுத்ததால் இருப்போம். இல்லையெனில் தவெகவுடன் போய்விடுவோம் என்று ஓபனாக பேசியது.
இருப்பினும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை இருந்த காரணத்தால், தேர்தல் சமயத்தில் கமிட்டிக்குள் அவரது கைதான் ஓங்கியிருந்தது. தேர்தலில் திமுவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், தேசிய தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் விஜய் உடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்தினர். இப்படியாக கூட்டணியும் அமைந்தது. ஆனால், இந்த சமயத்தில் எழுந்த உட்கட்சி முரண்பாடுகள் இப்போது வரை நீடித்து வருகின்றன.
இன்னும் கொஞ்ச நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கடுத்து நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த நேரத்தில் திமுக ஆதரவு தவெக ஆதரவு என கட்சி பிரிந்து இருந்தால் ஸ்கோர் செய்ய முடியாது என்பதை ராகுல் காந்தி உணர்ந்திருக்கிறார். எனவேதான் கோஷ்டி பூசல் விஷயங்களை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு வேலையை பாருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
அதற்கேற்ப, அவரும் ஒருதலைப்பட்சமாக இல்லாமல் நடந்துக்கொண்டிருக்கிறார். அதாவது இன்று சென்னை வந்த அவர், முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. அதேபோல மரியாதை நிமித்தமாக திமுக தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாரையும் சந்திக்காமல் உன்னை வென்றாய்
வார்தை இன்றி பேச வைத்தாய்
நெஞ்சுக்குள்ளே வன்மம் செய்தாய்
காலம் போக போக ராகுல் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
இதுபோன்ற காங்கிரஸ் செய்தி மட்டுமல்ல காலத்தின் கொடுமையால் நிகழும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம் ஜெம் தொலைக்காட்சியுடன் எப்போதும் இணைந்திருங்கள்



