ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் போட்டி..!

ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில், இந்திய வீரர் லக்சயா சென், தைவானின் சோ டியன் செனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன், அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், தைவானின் சோ டியன் செனுடன் மோதினார்.

இதில், முதல் சுற்றை 17 – 21 என்ற புள்ளிக் கணக்கில் இழந்த இந்திய வீரர், அடுத்த இரு சுற்றுகளில் சிறப்பாக விளையாடி 24 – 22, 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *