Sattur Fire Accident : உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு முதல்வர் விஜய் ரூ.4 லட்சம் நிதியுதவி.!

“விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த ஓதயல் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்த மாடசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டாசு ஆலைகளில் தொடரும் இது போன்ற விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாடசாமியின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையிலும், அவர்களின் வறுமையைப் போக்கும் வகையிலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது போன்ற விபத்துகள் நிகழாமல் இருக்கத் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.”

“உழைக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது போன்ற முக்கியச் சய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *