Lok Sabha Elections 2024 – EPS: கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்..

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியை நம்பி இல்லை, கூட்டணி இல்லை என்றாலும் சொந்தக்காலில் நிற்போம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அ.தி.மு.க கூட்டணியை நம்பி இல்லை, கூட்டணி இல்லை என்றாலும் சொந்தக்காலில் நிற்போம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அ.தி.மு.க முக்கிய காரணம். டெல்லியில் ஊழல் நடந்ததா, இல்லையா எனத் தெரியவில்லை.

தவறு நடந்தால் கைது செய்யட்டும். பா.ஜ.கவுக்கு பூஜியம் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ் தற்போது அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ்நாட்டில் பா.ம.க. கூட்டணி அமைக்காத கட்சிகளே இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊழல் நிலவுகிறது.

புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் கட்சி வளரும். நானும் ஒருகாலத்தில் புதுமுகம் தானே. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *