
சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக அரசுக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசால் கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்துச் செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய உறுதிமொழிகளை நிறைவேற்றக்கோரிப் போராட்டங்கள் நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதைக் குறிப்பிட்டுள்ளார். போராட்டம்ததில் ஈபட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட செவிலியர்களைக் காவல்துறையினர் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டுபோய் இறக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிய செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களுக்குத் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

