BYJU’S: அமலாக்கத் துறை நோட்டீஸ்!

Advertisements

பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 9,000 கோடி ரூபாய் அனுப்பியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படிபைஜுஸ் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து, பைஜுஸ் என்ற ‘ஆன்லைன்’ வாயிலான கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பைஜுஸ் நிறுவனம் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 9,000 கோடி ரூபாயை அந்நிறுவனம் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அமலாக்கத் துறை சார்பில் பைஜுஸ் நிறுவனத்துக்கு இந்தப் புகார்குறித்து விளக்கம் அளிக்கும்படி ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்தப் புகாரை மறுத்துள்ள பைஜுஸ் நிறுவனம், இதுகுறித்து விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பைஜுஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *