அஸ்ஸாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி.!

அஸ்ஸாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலியாகின. 5 ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன.

அஸ்ஸாமின் ஹோஜாய் மாவட்டத்தில் நேற்றிரவு 2 மணியளவில் புதுடெல்லியில் இருந்து சாய்ரங் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் பலியாகின. கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்துக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

தண்டாவளத்தில் யானைகள் நிற்பதை குறுகிய தொலைவில் பார்த்ததும் ரயிலின் லோகோ பைலட் எமர்ஜென்சி பிரேக்கை பிடித்துள்ளார். எனினும், ரயிலின் வேகம் காரணமாக யானைகள் மீது மோதி விட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.

விபத்தில் பயணிகள் காயமடையவில்லை. இதையடுத்து, தடம் புரளாத பெட்டிகளுடன் அந்த ரயில் காலை 6 மணியளவில் கவுகாத்தி நகரை நோக்கி புறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *