INDIA Alliance: நடிகர் கமலஹாசன் இணைகிறார்!

ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய தலைவர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்…

இ.ந்.தி.யாக்கூட்டணியில் தற்போது வரை 28 கட்சிகள் இணைந்துள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இந்தியா கூட்டணியில் திமுக இடம் பெறுகிறது தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் திமுக கூட்டணியுடன் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மையக் கட்சி தலைவருமான கமலஹாசன்.

இதற்கான திட்டங்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது மக்கள் நீதி மைய கட்சி இந்தியாவுடன் கூட்டணி வைப்பதாக முடிவு செய்திருக்கிறது இதற்கான ஆலோசனைக் கூட்டம்  நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த நிலையில் நடிகர் கமலஹாசன் இ.ந்.தி.யாவுடன் கூட்டணி என்ற தகவலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *