ஆசியாவின் மிகவும் வயதான வத்சலா என்ற யானை உயிரிழப்பு..!

Advertisements

ஆசியாவின் மிக வயதான யானையாக இருந்து வந்த வத்சலா என்ற பெண் யானை கடந்த செவ்வாய்க்கிழமை இறந்தது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தின் ஹினௌடா மலைத்தொடரில் உள்ள முகாமில் வத்சலா யானை தனது இறுதி மூச்சைவிட்டது. பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வத்சலா யானை உயிரிழந்து விட்டதாக மூத்த வன அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

100 வயதுக்கு மேலான பெண் யானையாகும் மற்றும் நீண்ட காலமாக நோயுடன் போராடி வந்தது. அதேபோல பல ஆண்டுகளாக பன்னா காடுகளின் அடையாளமாக இந்த யானை இருந்து வந்தது. சமீபத்திய நாட்களில், வத்சலாவின் முன் கால் நகங்கள் காயமடைந்தன. நேற்று ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் அருகே அமர்ந்திருந்த வத்சலாவால் எழுந்திருக்க முடியவில்லை.

வனத்துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வத்சலாவை எழுப்ப பல வழிகளிலும் முயன்றதாகவும், ஆனால் பிற்பகல் 1:30 மணியளவில் அதன் மூச்சு முற்றிலும் நின்று போய்விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக யானைகளின் ஆயுட்காலமான 60-70 ஆண்டுகளைவிட அதிகம். ஆனால் வத்சலா யானை 100 வயதிற்கும் மேலாகியும் உயிருடன் இருந்திருக்கிறது.

பன்னா காப்பகத்தில் விலங்குகளிடையே அரிதாகவே காணப்படும் அரவணைப்பையும், தோழமையையும் பிற யானைகளுக்கு வழங்கியது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.இதனிடையே வனத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் வத்சலாவின் இறுதிச் சடங்குகளை உரிய மரியாதையுடன் செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *