
சிறுபான்மையினரையும், தலித்துக்களையும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். எஸ்;.ஐ.ஆர்.திட்டம் என்று பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், தொல்.திருமாளவளவன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில், நபிகள் நாயகத்தின் ஆயிரத்து 500-வது ஆண்டு விழா, தகைசால் நாயகர் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீனுக்கு பாராட்டு விழா, சமய நல்லிணக்க விருது வழங்கும் விழா, நல்லிணக்க பொதுக் கூட்டம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, உரையாற்றினார்.
அப்போது, எஸ்.ஐ.ஆர். மத சார்பற்ற நாட்டை, மதம் சார்ந்த நாடாக மாற்றவே எஸ்.ஐ.ஆர். திட்டம் என்றும், சிறுபான்மையினரையும், தலித்துக்களையும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். எஸ்;.ஐ.ஆர்.திட்டம் என்றும் இதில் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தொல்.திருமாவளவன் தெரிவத்தார்.
விழாவில், வேலூர் கதிர்ஆனந்த், இராமநாதபுரம் நாவாஸ் கனி, குடியாத்தம் சட்டப் பேரவை உறுப்பினர் அமலுவிஜயன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல்பாசில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



