எடப்பாடியுடன் மோதல்: தங்கமணி பல்டி? அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

Advertisements
முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமும் அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான தங்கமணி அதிமுகவிலிருந்து பல்டி அடிக்க போவதாக மீண்டும் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது .இது தொடர்பாக ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஆகியவற்றில் அமைச்சராக இருந்தவர் பி தங்கமணி.தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக திகழ்ந்து வருகிறார்.எடப்பாடி பழனிச்சாமிக்கும் தங்கமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் தங்கமணி அதிமுகவை விட்டு விலகப் போவதாகவும் தகவல் வெளியாகின.இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் தங்கமணி மீண்டும் மோதல் போக்கை கடைபிடித்து இருக்கிறார்.
அதிமுகவின் நீண்ட கால உறுப்பினரும் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியை விட்டுநீக்கப்பட்டார் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் இந்த நிலையில் அவருடன் முன்னாள் அமைச்சர் சிலரும் அதிமுகவை விட்டு விலகி தமிழக வெற்றி கழகத்தில் சேர்ப்பவராக தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.குறிப்பாக சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது
செங்கோட்டையனிடம் இது தொடர்பாக பலர் திரை மறைவில் பேசி வருவதாக சொல்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது நடைபெற்ற அதிமுக பொது குழு தீர்மான குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி இடம்பெறாதது அதிமுகவில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது .கடந்த சில தினங்களாக இரண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் செங்கோட்டையன் பேசி வருவதாக சொல்லப்படும் நிலையில் தற்பொழுது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முன்னதாக செங்கோட்டையன் விலகிய போது தங்கமணியும் அதிருப்தியில் இருக்கிறார் என்ற தகவல் பரவியது ஆனால் திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் தங்கமணியும் கலந்து கொண்டதால் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .தற்பொழுது அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதில் வாசிக்கப்பட இருக்கும் தீர்மானங்கள் தயாரிப்பு பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக தலைமை இடத்தில் நடைபெற்றது
அந்த கூட்டத்தில் சி.வி சண்முகம் கேபி முனுசாமி ஜெயக்குமார் உள்பட பலரும் பெற்று இருக்கின்றனர் ஆனால் கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் தங்கமணி அந்த தீர்மான குழுவில் இடம் பெறவில்லை அன்றைய தினமே இது தொடர்பான பேச்சுக்களும் அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது .தீர்மானக் குழுவில் இடம் பெறாதால் தான் தங்கமணி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அதிமுகவினர் பேசி வந்தனர்
அதிமுகவில் பல ஆண்டு காலமாக உழைத்து வரும் தன்னைதீர்மான குழுவில் சேர்க்கவில்லை என தங்கமணி மிகுந்த கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது இதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதும் முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது.தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி மீது கருத்து வேறுபாட்டில் இருக்கும் தங்கமணியை செங்கோட்டையன் வலை போட்டு இழுத்து விடலாம் என பேசப்படுகிறது.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தன்னிலை விளக்கம் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *