Cricket World Cup: இந்தியா இரண்டாவது வெற்றி!

இந்தியா இரண்டாவது வெற்றி!

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற  லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியானது மதியம் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறினர்.

அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து  ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கடைசியாக ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து  50 ஒவரில் 272 ரன்களை எடுத்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றியெனத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். கடைசியாக  இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுத்து 273 அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *