கல்விக்காக அரசு பெரும் நிதி ஒதுக்கீடு..!

குடியாத்தம் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினர் அமலுவிஜயன் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு பேசியபோது, கல்விகாக அரசு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு உயர்கல்விக்காக பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.

மாணவர்கள் செல்போன் பயன்படுத்துதல் கல்விகாகவும் அறிவியல் மற்றும் உலகை அறிய மட்டுமே என்றார். இதன் பின்னர், 85 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குடியாத்தம் ஓன்றிய குழு தலைவர் சத்தியானந்தம், பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சேகரன், வளத்தூர் ஊராட்சித் தலைவர் நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *