ஆகஸ்ட் 10 ஆம் தேதி அரசியலுக்கு வருகிறார் ராமதாஸ் மகள்..!

Advertisements
அடுத்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மூத்த மகன் காந்திமதி அரசியலுக்கு வருகிறார்  . பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையே ஒருவருக்கொருவர் போட்டி‌ போட்டு கட்சியை இரண்டாக உடைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கு மேல் சமரசம் இல்லை என்கிற உச்சகட்ட சூழ்நிலையில் இருவரும் தனித்தனியாக கூட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள்
அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது டாக்டர் ராமதாஸ் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார் .
இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மாநாடு நடைபெறும் பகுதிக்கு டாக்டர் ராமதாஸ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார் தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச் செயலாளரும் எம் எல் ஏகவூமான அருள் மாநாட்டு பணிகளை முன் நின்று நடத்தி வருகிறார் .
இந்த மாநாட்டில் 5 லட்சம் பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன . இதற்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய மாநாடுகளில் டாக்டர் அன்புமணி சௌமியா அன்புமணி அவர்களது மகள் சங்கமித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்  ஆனால் இந்த மாநாட்டில் அன்பு மணியோ சௌமியா அன்புமணியோ சங்கமித்ராவோ கலந்து கொள்ளவில்லை .
இந்த மாநாட்டுக்காண அழைப்பிதழ் சுவரொட்டிகள் பேனர்கள் ஆகியவற்றில் அன்புமணி பெயரர் இடம் பெறவில்லை அவரது படமும் இடம்பெறவில்லை . அதே சமயத்தில் மருத்துவர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்  ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய கூட்டத்தில் காந்திமதி முன்னிருக்கியில் அமர்ந்திருந்த நிலையில்
இந்த மகளிர் மாநாட்டை பொருத்தவரையில் அவர் சிறப்பு விருந்தினராக மேடை ஏறுகிறார் .
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியில் காந்திமதிக்கு பதவி தரப்படுமா என்ற கேள்விக்கு மருத்துவர் ராமதாஸ் போகப்போக தெரியும் என்றார் .தற்பொழுது இந்த மாநாட்டில் காந்திமதிக்கான புதிய பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது . அனேகமாக கட்சியை வழிநடத்திச் செல்லும் தலைமை பொறுப்பு காந்திமதிக்கு வழங்கப்படும் என தெரிகிறது .

மருத்துவர் ராமதாசுக்கு வயதாகி விட்டபடியால் அவருக்கு வலது கரமாக நம்பிக்கைக்குறிய ஒருவர் தேவைப்படுகிறார் அந்த வகையில் காந்தி மதிக்கு முக்கிய பதவி தர காத்திருக்கிறார் . இந்த மாநாட்டில் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான பேரும் கலந்து கொள்கிறார்கள் என்பது முக்கிய செய்தியாகும்.

Error: Contact form not found.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *