அனைத்து தலைவர்களையும் போல உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மக்களை சந்திக்கும் சுற்று பயணத்தை தொடங்கி விட்டார் . திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்டத்திலும் எந்த அளவுக்கு அரசு திட்டங்கள் மக்களை போய் சேர்ந்து இருக்கிறது. அதனால் மக்கள் எந்த அளவில் பயன்பெற்று இருக்கிறார்கள். குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மற்றும் பெண்கள் எந்த அளவுக்கு பயன்பெற்று இருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகிறார் . இது தொடர்பாக அரசு திட்டங்கள் குறித்து அவர் பேசியும் வருகிறார் .
இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் உள்ள இளைஞர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் தர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் எதிர்பார்க்கிறார் . கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக 177 தொகுதிகளில் போட்டியிட்டது . மேலும் 57 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இந்த முறை கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சென்ற முறை போலவே கூட்டணி கட்சிகளை குறைவான எண்ணிக்கையில் அடக்கி விட வேண்டும் என மு க ஸ்டாலின் கணக்கு போட்டு வருகிறார் .
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரையில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினருக்கு சீட் வேண்டும் என எதிர்பார்க்கிறார் . இது தொடர்பாக 40 முதல் 50 தொகுதிகள் இளைஞரணி மற்றும் மாணவர் அணிக்கு ஒதுக்க வேண்டும் என திமுக மேலிடத்தில் அவர் கோரிக்கை வைத்து வருகிறார் . தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் விஜய் களம் இறங்குவதால் திமுகவிலும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து வருகிறார் .
இது குறித்து திமுக மேல் இடத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும் பொழுது நடிகர் விஜய்க்கு 87 லட்சம் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து இணைய பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் திமுகவிலும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் என பேசி இருக்கிறார் . இதற்கிடையே தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இளைஞர்களின் பங்கு முக்கிய இடம் இருக்கிறது. கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 25 தொகுதிகளில் ஐந்தாயிரம் வாக்குகளுக்கும் குறைவாகத்தான் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது .
அந்த ஐந்தாயிரம் வாக்குகளும்தொகுதி வாரியாக விஜய்க்கு அல்லது அதிமுகவுக்கு வாக்களித்தால் அது திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இதை தடுப்பதற்கு அதிக அளவில் புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என உதயநிதி வலியுறுத்தி வருகிறார் . ஆனால் மு க ஸ்டாலினை பொருத்தவரையில் கலைஞர் காலத்தில் இருந்து அனுபவம் மிக்கவர்களுக்கும் ஆட்சியில் நீண்ட காலமாக பணி செய்து வருபவர்களுக்கும் தொகுதி வாரியாக சீட் ஒதுக்கி தரப்படுவது வழக்கமாக இருக்கிறது .
எனவே அவர்களை புறக்கணிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது . அந்த வகையில் 25 தொகுதிகளில் வேண்டுமானால் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பு தரலாம் என கருதுகிறார் . இதனால் திமுக மேல் தரப்பில் தற்பொழுது குழப்பம் நிலவி வருகிறது . உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை ஏற்கப்படுமா நிராகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



